என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுப்பிரமணிய சாமி"
- தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணமில்லை என்பதால் மறுத்து விட்டேன் என நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்
- நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது
மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.
இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.
இந்நிலையில், இது தொடர்பாக, பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணிய சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட மோடியிடம் பணம் கேட்டிருக்கலாம். மேலும் அவர் 2004-05 மற்றும் 2022-23க்கான வருமான வரி அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தேர்தலில் போட்டியிடாததற்கான உண்மையான காரணத்தை நிர்மலா சீதாராமன் கூறியிருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
- மத்திய அரசிடம் 2 வாரங்களுக்குள் கோரிக்கை மனுவை அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி வழங்கினர்.
புதுடெல்லி :
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த ஜனவரி 19-ந்தேதி விசாரித்தது.
அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் விவகாரம் ஆய்வில் உள்ளது என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் 2 வாரங்களுக்குள் கோரிக்கை மனுவை அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி வழங்கினர். மத்திய அரசு எடுக்கும் முடிவு தொடர்பாக கோர்ட்டை நாடுவதற்கும் சாமிக்கு அனுமதி அளித்து, அவருடைய இடையீட்டு மனுவை முடித்து வைத்தனர்.
இந்த நிலையில், நேற்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு சுப்பிரமணிய சாமி முறையிட்டார்.
''இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்பதால் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளேன். அந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி, அரசியல்சட்ட அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகள் நிறைவடைந்த பிறகு இந்த பொதுநல மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ரூ.8 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கிறது. நிதி நெருக்கடியால் அனைத்து விமான சேவைகளையும் அந்த நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லியும், சிவில் விமான போக்குவரத்து ராஜாங்க மந்திரி ஜெயந்த் சின்காவும் தான் காரணம் என பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறி உள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு பார்சல் செய்து கொடுக்கும் வேலையை செய்ய வேண்டாம் என அருண் ஜெட்லிக்கும், ஜெயந்த் சின்காவுக்கும் நரேந்திர மோடி கூற வேண்டும் என்றும் சுப்பிரமணிய சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையொட்டி அவர் சிவில் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ் பிரபுவுக்கும் அவர் ஒரு கடிதமும் எழுதி உள்ளார்.
இந்த தகவல்களை அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #JetAirways #SubramanianSwamy
சென்னை:
ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டின் காவலாளிகள் என பிரதமர் மோடி தெரிவித்தார். இதையடுத்து நானும் காவலாளி தான் என்ற ஒரு பிரசாரத்தை பா.ஜ.க.வினர் தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் டுவிட்டரில் சவுக்கிதார் (காவலாளி) நரேந்திர மோடி என பெயரை மாற்றி உள்ளார். அமித்ஷா, அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் தங்களது பெயருக்கு முன்னால் சவுக்கிதார் என மாற்றி உள்ளனர்.
இந்த நிலையில் ஒரு தனியார் டி.வி.க்கு பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சவுக்கிதார் என்ற பெயர் மாற்றத்தை கட்சியினர் செய்து வர நீங்கள் மட்டும் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சுப்பிரமணியசாமி சர்ச்சையான பதிலை அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
நான் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னால் காவலாளி ஆக முடியாது. பிராமணர்கள் காவலாளிகளாக முடியாது.
இதுதான் உண்மை. நான் சொல்லும் பணிகளை நிறைவேற்றுவதே காவலாளிகளின் பணியாகும். இதைதான் சவுக்கிதார்களிடம் எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். அதனால் நான் காவலாளியாக முடியாது.
இவ்வாறு அவர் சர்ச்சையாக கூறியுள்ளார். #SubramanianSwamy #BJP
சென்னை:
பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-
உலக அளவில் இந்திய பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறி வருகிறார். ஆனால் உண்மையில் நமது பொருளதாரம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தில் உள்ளது. இருந்தாலும் பிரதமர் மோடி ஏன் 5-வது இடத்தில் இருப்பதாக சொல்லி வருகிறார் என்பது புரியவிலலை.
பிரதமருக்கு பொருளாதாரம் தெரியாதது தான் அதற்கு காரணம். அவருக்கு மட்டுல்ல நிதிஅமைச்சர் அருண்ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரிய வில்லை. அன்னிய செலாவணி மதிப்பை அடிப்படையாக வைத்து அவர்கள் இருவரும் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மதிப்பு தொடர்ந்து மாறக்கூடியது. அதனை அடிப்படையாக கொண்டு பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது மிகவும் தவறாகும்.
தற்போதைய நிலையில் அந்த விகிதத்தை கொண்டு கணக்கிட்டால் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் அல்ல 7-வது இடத்தில் இருக்கிறது.
உண்மையில் பொதுமக்களின் வாங்கும் திறனை அடிப்படையாக கொண்டே நாட்டின் பொருளாதாரம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வாறு நிர்ணயித்தால் இந்திய பொருளாதாரம் தற்போது உலக அளவில் 3-வது இடத்தை வகிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். #SubramanianSwamy #PMModi
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து வழக்கம்போல் சர்ச்சையை ஏற்படுத்த, அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவியத் தொடங்கி உள்ளன.
சுப்பிரமணிய சாமியின் இந்த கருத்துக்கு தமிழக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கள் பாஜகவின் கருத்துக்கள் அல்ல என நேற்று கூறியிருக்கிறார்கள். எனவே, இதற்கும் மறுப்பு வரும் என நினைக்கிறோம். எனவே, இதை பாஜக கருத்தாக பார்க்கவில்லை. சுப்பிரமணிய சாமியின் தனிப்பட்ட கருத்து. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவருடைய கருத்து ஏற்புடையது அல்ல. எந்த சூழ்நிலையிலும் அந்த மாதிரி இழிநிலை இந்தியாவுக்கு வரும் என நாங்கள் நினைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #SubramanianSwamy #MaFoiPandiarajan
ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சாமி பேசுகையில், நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பத்தினருக்கும், சுயதொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கும் வருமான வரி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் சதவீதம் மிக மிகக் குறைவாகும். இந்த சிறிய சதவீதத்துக்காக மக்கள் மீது வருமான வரி என்னும் சுமையை ஏன் சுமக்க வேண்டும்?... எனவே வருமான வரியை ஒழித்துக் கட்ட வேண்டும். இப்படி செய்தால் அதிக அளவில் சேமிப்புகள் உருவாகும். இதனால் முதலீடுகள் பெருகி நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். வருமானவரியை ஒழிப்பதன் மூலம் இழக்கும் தொகையைவிட மறைமுக வரி மூலம் அரசுக்கு அதிக தொகை கிடைக்கும்.
மேலும் இயற்கை வளங்கள் மற்றும் அலைக்கற்றை ஆகியவற்றை ஏலம் விடுதல் முறைக்கு கொண்டு வருவதன் மூலம் நிதி ஆதாரமும் நிறைய கிடைக்கும் என்றார்.
2G, 3G, 4G, 5G என வரிசையாக காத்திருக்கும் அலைக்கற்றையை ஏலம்விடலாம், நிலக்கரி சுரங்கத்தையும் ஏலம் விடலாம் என பேசிஉள்ளார். ஏழ்மை மற்றும் வேலையிண்மை பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றால், 10 வருடங்களுக்கு நம்முடைய வளர்ச்சி 10 சதவிதமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். #SubramanianSwamy #IncomeTax
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்